Monday, October 14, 2013

இலங்கை சனத்தொகையில் 7% முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பு

இலங்கை சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் அல்லது 14 லட்சம் பேர் முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜெயதிலக  இதனைத் தெரிவித்துள்ளார். முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்படுவதால், வருடாந்தம் இலங்கையில் 2  ஆயிரம் பேர் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதகா அவர் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின்  அறிக்கையின் படி, உலக சனத்தொகையில் 15 சதவீதமானவர்கள் முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.
Disqus Comments