Monday, October 14, 2013

நவராத்திரி கோவில் திருவிழா நெரிசல் - பலி எண்ணிக்கை 115க்கு மேல்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோவிலின் நவராத்திரி பண்டிகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

சிந்து நதிக்கரையின் ஓரத்தில் மிகவும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள. ராம்புரா கிராமத்தில் இருந்து இந்த அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் சிந்து நதி மீது கட்டப்பட்டுள்ள பெரிய பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்தப் பாலம் இடியப் போகிறது என்ற வதந்தி பரவியதால், உண்டான பதட்டம் மற்றும் நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் காவல்துறையினர் தடியடி நடத்தியதை அடுத்தே இந்த நெரிசல் ஏற்பட்டது என்றும் சில பக்தர்கள் கூறினர்.

உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவ் ராஜ்சிங் சவுகான் உத்தர விட்டுள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1.5 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிர மும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் இழப்பீடு தொகை தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Disqus Comments