Saturday, October 26, 2013

சோமாலியாவை பற்றி தெரியுமா? நரகத்தின் மறு உருவம்!

இன்றைக்கு சோமாலியாவில் நடக்கு பஞ்சத்தின் அழிவுகளை ஒரு பார்வை பார்ப்போம்.
imagesசோமாலியா நாடே  ஒரு சுடுகாடுதான். இங்கு மரத்தில் இலைகளில் கூட பச்சை நிறத்தைகாண முடியாது. இங்கு ஆறடி மனிதன் கூட அறையடியில் ஊர்ந்துதான் செல்கின்றான். தூக்கி செல்ல முடியாமலும், பசியினாலும் தான் பெற்றெடுத்த குழந்தைகளை தானே தின்னும் அவல நிலைதான் தினம் தினம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் பரிதாபமுடையவர்கள்  குழந்தைகளை அங்கேயே சக விட்டு செல்கின்றனர். குழந்தை வாழ்வா, சாவா எனப் பேராடி இறுதியில் பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையாகின்றன.  பசியால் இறந்த குழந்தையை அடக்கம் செய்வதற்கு கூட நாதி இல்லை உடம்பில் பிராணி இல்லை.

somalia1நரகத்தை நேரில் காண்பது போல் தான் சோமாலியா தேசமே காணப்படும். இந்த நாடு வேறெங்கும் இல்லை ஒரு மாபெரும் கண்டத்தில் (ஆப்பிரிக்க கண்டத்தில்) தான் உள்ளது. செத்து சேதமடைந்த எலும்பு கூடுகள் எப்படி இருக்குமோ அப்படிதான் இவர்களின் உடல்கள் காணப்படும். குருதிகள் இவர்கள் உடலில் ஒருகிறதா என்பதை கூட அறிய முடியாத நிலைதான். குழந்தைக்கு பால் கொடுப்பதற்க்கு கூட தாயின் மடுவில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை.

தண்ணீருக்காக மாட்டின் கோமியத்தை குடிப்பதற்காக வரிசையில் நிற்கும் மக்கள். ஒருவேளை உணவை கண்டாலே அது அவர்களுக்கு அமிதம் தான், அந்த ஒருவேளை உணவை வைத்து கொண்டுதான் ஒரு வாரகாலம் உயிரோடு தாக்கு பிடிக்கிறார்கள்.

397645_520618794639057_27617228_nநாட்டின் தெற்குப்பகுதிகள் பெரும்பாலும் ஆயுதக் குழுக்களின் பிடியில் இருக்கின்றன. இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. திருடினால் கையை வெட்டுவார்கள். கலப்படம் செய்தால் கல்லால் அடிப்பார்கள். போதைப் பொருள் கடத்தினால் தூக்கிலிடுவார்கள். உணவுக்கே வழியில்லாத மக்களின் நிலைமை, இவைபோன்ற கடுமையான சட்டங்களாலும் சண்டைகளாலும் மேலும் மோசமடைந்திருக்கிறது.

நாட்டில் மழையில்லை, இயற்கை வளங்கள் இல்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முறையான அரசு நிர்வாகம் இல்லை என்பதுதான் இங்குள்ள பஞ்சத்துக்கு அடிப்படைக் காரணம்.

சோமாலியாவில் அரசை அமைப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், ஐ.நா. அமைப்பும் பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கின்றன. கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், இன்னும் அரசற்ற நாடாகவே சோமாலியா இருந்து வருகிறது.
Disqus Comments