அல் இர்பான் பாடசாலை பகுதியில் வசித்துவரும் கபூர் முதலாளியின் 26 வயது
மகன் அஸ்வர் முஹம்மட் என்பவர் சவுதி அரேபியாவில் நேற்று (2013.11.14)
மரணமடைந்துள்ளார் .( இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
நேற்று முன்தினம் (2013.11.13) இரவுநேர சாப்பாட்டியினை முடித்துக்கொண்டு
படுக்கைக்கு சென்றவர் மறுநாள் காலையில் எழும்பாதவாரு இருந்தமையை அறிந்த
நண்பர்கள் சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
வைத்தியர்கள் இவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்ததை அடுத்து ஜனாஸா மேலதிக
வைத்திய பரிசோதனைகளுக்காக சவூதி அரேபியாவில் வைக்கப்ட்டுள்ளது.
இதுவரையில் இவரின் மரணத்திற்கான வைத்திய அறிக்கை கிடைக்கப்பெறவில்லை
திருமணமான அஸ்வர் முஹம்மட் 1987 -09- 07 திகதி பிறந்தவராவார் 7
வருடங்களாக சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் சுவர்க்கம் கிடைக்க வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக.
(PN)