Sunday, November 10, 2013

ஒன்பது மாதங்களில் 340 ரயில் விபத்துக்கள் - ரயில்வே திணைக்களம்

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 340 ரயில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ஊடாக பயணித்தல், மிதி பலகையில் பயணம் மேற்கொள்ளல் மற்றும் ரயில் பாதையில் நடந்து செல்லல் போன்ற காரணங்களினால் விபத்துகள் நேரிட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் சேனக ஜயசேன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Disqus Comments