Monday, November 4, 2013

4ம் திகதி முதல் 10ம் திகதி வரை தேசிய சுவடிகள் பாதுகாப்பு வாரமாக பிரகடனம்


இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இந்த வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தேசிய சுவடிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

1640 ஆம் ஆண்டு முதல் காணப்பட்ட ஆவணங்கள் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் காணப்படுகின்றன.

பிரித்தானியா ஆட்சிக் காலப்பகுதி மற்றும் சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களும் இங்கு இருப்பதாக தேசிய சுவடிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சரோஜா வெத்தசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.

இவற்றுள் பொறியியல் துறை சார்ந்த அதிகளவிலான ஆவணங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பில் மக்களை தெளிவூட்டவும், பொறியியல் துறையில் ஆர்வம் காட்டுவோர் காணப்படின், அவர்கள் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காகவே இந்த வருடம் தேசிய சுவடிகள் பாதுகாப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறினார்.

பண்டையகால சுவடிகளின் ஊடாக பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்ள முடியும் என தேசிய சுவடிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சரோஜா வெத்தசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.

எதிர்காலத்தில் பொறியியல்துறை சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, பண்டைய பொறியியல் துறைசார் அனுபவங்களை இதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொறியியல் கற்கையை முன்னெடுக்கும் மாணவர்கள் மற்றும் பொறியியலாளர்களுக்கு வழிகாட்டியாகவு,ம் பயனுள்ளதாகவும் இந்த தேசிய சுவடிகள் பாதுகாப்பு வாரம் அமையும் என நம்புவதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சரோஜா வெத்தசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Disqus Comments