Thursday, November 7, 2013

டுபாயில் நீா்த்தாங்கியிலிருந்து இலங்கையரின் சடலம் மீட்பு

டுபாயிலுள்ள நீர் தாங்கியொன்றிலிருந்து இலங்கையொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  டுபாய், அல் குவோஸ் பகுதியிலுள்ள திருமணமாகாத அதிகாரிகள் மட்ட உத்தியோகத்தர்கள் வாழும் ஒரு கட்டிடத்தின் கூரையிலிருந்தே இந்த சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அழுகிய நிலையில் டுபாய் பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சடலம், ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 34 வயதான இலங்கையை சேர்ந்த சமயல்காரரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மதுவுக்கு அடிமையான இவர்இ ரஷ்ய உணவகமொன்றிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் இறந்தவரது நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிந்திக்கின்றனர்.

குழாய் நீரில் இரண்டு நாட்களாக ஏன் துர்நாற்றம் வீசியதென அறிந்துகொண்ட குடியிருப்பாளர் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்துள்ளனர்.
Disqus Comments