காதலர்களின் சுவர்க்கபுரியொன்றில் காதலனைக் கட்டி வைத்து விட்டு காதலியை மிகக் கொடூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பாடசாலை மாணவர்கள் உட்பட ஐவர் அடங்கிய கோஷ்டியை கடந்த 7 ஆம் திகதி தெஹியத்தகண்டிய நீதிவான் நீதிமன்ற நீதிவான் சமர விக்கிரமநாயக முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணி வகுப்பில் முக்கிய சந்தேக நபரான 19 வயது இளைஞரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து சந்தேக நபர் நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்றதால் தெஹியத்தகண்டிய நகரம் பரபரப்புக்குள்ளானது.
பின்னர் தெஹியத்தகண்டிய பொலிஸார் பதுளை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள 16, 17, 18 வயதான மாணவர்கள் மூவர் கடத்தல், கடத்தலுக்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றங்களுக்காக 10,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தெஹியத்தகண்டிய, தியவித்தாகம, சந்கிந்த நீர்வீழ்ச்சியை அண்டிய பிரதேசம் காதலர்களின் சுவர்க்கபுரியென அழைக்கப்படுகின்றது.
கிராந்துரு கோட்டேயைச் சேர்ந்த 26 வயதான காதலனுடன் வந்த 24 வயதான காதலி தியவித்தாகம ரன்கிந்த நீழ்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் காதல் மொழி பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இந்த ஐந்து இளைஞர்களும் இரகசிய பொலிஸார் என தெரிவித்து இளைஞனின் பணப்பை மற்றும் முச்சக்கர வண்டியின் திறப்பை பறித்துக் கொண்டு காதலனை கட்டி வைத்து விட்டு காதலியை கடத்திச் சென்று மூன்று இளைஞர்கள் அவரை மிகக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்தியுள்ளனர்.
ஐந்து இளைஞர்களும் காதலனை தாக்கும் போது மெதகம பிரதேசத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த நபரிடம் விடயத்தை கூறிய போது அவர் இவ்விருவரையும் காப்பாற்றியுள்ளார். தெஹியத்தகண்டிய பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.