Friday, November 8, 2013

உலகில் மிக நீளமான மீசையுடையவராக இந்தியர் சாதனை

உலகில் மிக நீளமான மீசையுடையவராக இந்தியர் ஒருவர் சாதனைப்படைத்துள்ளார்.

இந்தியா, ராஜஸ்தான் ஜெய்பூரைச் சேர்ந்த ராம் சிங் சவுன் என்ற 58 வயதுடைய நபரே இவ்வாறு சாதனைப்படைத்துள்ளார்.
இவரது மீசையின் நீளம் 14 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் மதிப்புள்ள பொருளாக தனது மீசையை கருதும் இவர் அதனை வளர்ப்பதற்காக 32 வருடங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தினமும் இரண்டு மணித்தியாலங்களை தனது மீசையை சீர்ப்படுத்துவதற்காக அவர் செலவிட்டு வருகின்றார்.

'மீசையை வளர்ப்பவர்கள் அதனை ஒரு குழந்தையை கவனிப்பது போன்று பரமாரிக்க வேண்டும்.  மீசையை வளர்ப்பது அவ்வளவு இலகுவானதல்ல. 14 அடி நீளமுள்ள இந்த மீசையை வளர்ப்பதற்கு எனக்கு நீண்ட காலம் எடுத்தது'  என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

'பெருமை மற்றும் மரியாதைக்குரிய அடையாளமாகவே இந்த மீசைக் காணப்பபடுகின்றது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




Disqus Comments