Saturday, November 30, 2013

யுனிசெஃப் (UNICEF) தூதராக சச்சின் தெண்டுல்கர் நியமனம்!

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations International Children's Emergency Fund) சச்சின் தெண்டுல்கரை 2 ஆண்டுகளுக்குத் தனது தெற்காசியாவிற்கான தூதராக நியமித்துள்ளது.

இவ்வமைப்பு உலகளாவிய அளவில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக பாடுபட்டு வருகிறது. மேலும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகளையும் பரப்பி வருகிறது.

"யுனிசெஃப் தூதராக எனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்சை துவங்குகிறேன்" என சச்சின் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும், "உலகில் 36% மக்கள் சுகாதாரமான மற்றும் சுத்தமான கழிப்பிடவசதி இன்றி வாழ்ந்துவருகிறார்கள். நான் குழந்தைகளிடையே தூய்மையான கழிவறை பற்றியும், சுகாதாரமான சூழல்கள் பற்றியும் பிரச்சாரம் செய்வேன்" எனவும் கூறியுள்ளார்.
Disqus Comments