விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற 1-5 வரையான வகுப்புக்களில் கல்வி கற்கும் தேர்வு செய் யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தின் விருதோடைப் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் TMM. றிஸ்வி அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விருதோடையின் சிரேஷ்ட ஊடகவியாளர் ஜனாப் மர்லின் மரைக்கார் அவர்களும், சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜம்யிய்யதுஸ் ஷபாப் அமைப்பின் பிரதிப்பணிப்பாளருமான மௌலவி ஆ.எஸ்.எம் தாஸிம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் SHM. முஸம்மில் அவர்களும், ஜம்யிய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி ஜனாப். வாரித் ஜவாத் அவர்களும், விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் அதிபர் NMM. சபீக் அவர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பாடசாலை உபகரணங்களும், பாடசாலைத் சீருடைத் துணிகளும் ஜம்யிய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரனையின் கீழ் வறுமைக்கு கோட்டுக்குக் கீழ்வாழுகின்ற வறிய மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இப்பரிசளிப்பு விருதோடையின் சிரேஷ்ட ஊடகவியாளர் ஜனாப் மர்லின் மரைக்கார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் விருதோடைப் பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு செய்து முடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.