மேல் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா போட்டியிடவுள்ளார்.
கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அனோமா பொன்சேகா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதமளவில் மேல் மாகாணசபை கலைக்கப்பட உள்ளது.
இதேவேளை, கட்சியோ தாமோ போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், மேல் மாகாண மக்கள் தாம் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விரும்பினால் அது குறித்து கவனம் செலுத்தத் தயார். மத்திய கொழும்பில் பிறந்த பெண் என்ற ரீதியில் கொழும்பு மாவட்ட மக்கள் மீது கூடுதல் ஈடுபாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.