Sunday, January 19, 2014

டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார் - மஹேல ஜயவர்தன

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெறுமையை பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணியுடன் சார்ஜாவில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இந்த மைல்கல்லை பெறும் எட்டாவது வீரராகவும் மஹேல ஜயவர்தன திகழ்கிறார்.

141 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவரும் மஹேல ஜயவர்தன 32 சதங்கள், 45 அரைச்சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர்களில் வரிசையில் மஹேல ஜயவர்தனவுடன், மேற்கிந்திய தீவுகளில் சிவ்நரேன் சந்திரபோல் மாத்திரமே தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments