100 மீற்றர் தூரத்தை 32.79 செக்கன் நேரத்தில் ஓடிக் கடந்து 104 வயது வயோதிபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐரோப்பாவிலேயே 100 மீற்றர் தூரத்தை வெற்றிகரமாக ஓடிக் கடந்த மிகவும் வயதானவர் என்ற பெயரை போலக் தின் ஸ்விட்னிகா நகரைச் சேர்ந்த ஸ்ரெயின்ஸ்லாவ் கொவல்ஸ் கி என்ற மேற்படி வயோதிபர் பெறுகிறார்.
அவர் ஏற்கெனவே 96 வயது ஐரோப்பியர் ஒருவரால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.
தனது வாழ்நாளில் பெரும் பகுதியை தனது பணியிடத்திற்குச் செல்வதற்கான 10 கிலோ மீற்றரை நடந்தும் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பதிலும் கழித்த அவர் தனது 92 ஆவது வயதிலேயே ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பதை பொழுதுபோக்காக மாற்றிக்கொண்டார்.
தனது ஓட்ட சாதனை குறித்து கொவ்ல்ஸ்கி விபரிக்கையில் தன்னை தற்போது புதிய மனிதனாக உணர்வதாகக் கூறினார்.
அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிர்ப்பதே தனது இளமையின் இரகசியம் என அவர் தெரிவித்தார்.