இணையத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்திக்க உல்லாசமாக சென்ற 57 வயது நபரொருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்பதைக் அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
வாங் என்ற மேற்படி நபரும் அவரது மருமகளான லிலியும் இணையத்தளத்தில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான சமயத்தில், தம்மை பற்றி ஒருவருக்கொருவர் இனம் காட்டாது போலியான விபரங்களை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஹெயிலோங்ஜியாங் மாகாணத்தில் முலிங் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் ஒருவரையொருவர் சந்திக்க ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
சம்பவ தினம் மாலை 6.00 மணியளவில் தான் சந்திக்கப்போவது தனது மகனின் மனைவியை என்பதை அறியாது வாங்கும் தான் சந்திப்பை மேற்கொள்ளப்போவது தனது கணவரின் தந்தையுடன் என்பதை அறியாது லிலியும் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.இந்நிலையில் தனது மனைவியின் இணையத்தளம் மூலமான தொடர்புகளால் சந்தேகம் கொண்டிருந்த லிலியின் கணவரும் வாங்கின் மகனுமான டா ஜுன்னும் மனைவியை பின் தொடர்ந்து ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
அதேசமயம் ஹோட்டலில் ஒருவரையொருவர் நேருக்கு நேர் எதிர்கொண்ட வாங்கிற்கும் லிலியிற்கும் அதிர்ச்சி.
மனைவியின் கள்ளக் காதலை கையும் களவுமாக கண்டறிய அங்கு வந்திருந்த டா ஜுன் அங்கு தனது மனைவிக்காக தனது தந்தை காத்திருப்பதை கண்டு கடும் சினத்துக்குள்ளாகியுள்ளார்.
இதையடுத்து டா ஜுன் வாங்கையும் லிலியையும் அடித்து உதைத்துள்ளார். இதன்போது லிலியிற்கு 3 பற்களையும் இழக்க நேர்ந்துள்ளது.
தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் டா ஜுன்னை கைது செய்தனர்.
டிரக் சாரதியான டா ஜுன் நீண்ட தூர பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேர்ந்ததால் தனிமையில் பொழுதை கழித்த லிலி இணையத்தளம் மூலம் போலியான பெயரில் அறிமுகமான வாங்கின் பால் ஈர்க்கப்பட்டுள்ளார்.இதன்போது லிலி தனது புகைப்படமென தனது கவர்ச்சிகரமான தோற்றமுடைய நண்பியின் புகைப்படத்தையும் வாங் தனது புகைப்படமென தான் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் தனது நண்பராக இருந்தவர் ஒருவரது புகைப்படத்தையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.கம்பனியொன்றின் பணிப்பாளரான வாங், இரு வருடங்களுக்கு முன் தனது மனைவி இறந்தது முதற்கொண்டு தனிமையில் வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில், இணையத்தளத்தில் வேறு பெயரில் அறிமுகமான லிலியிடம் அவர் காதல் கொண்டதாக கூறப்படுகின்றது.