அதிவேக நெடுஞ்சாலைகளில் இது வரைக்கும் 1094 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த
2011.11.27 திகதி முதல் இது வரைக்கம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 999
வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் பாரதூரமான விபத்துக்கள் 11
இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் 2013.10.27 திகதி முதல் இது வரைக்கும் 95 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
அதிவேக
நெடுஞ்சாலையில் 100-110 வேகத்தை விட அதிகமாக வாகனங்கள் பயணிக்கும்
பட்சத்தில் சி.சி.டி.வி கெமரா மூலம் அவதானிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
