மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் என சந்தேகப்படும் 3 பேரை மலேசிய அரசு இலங்கைக்கு நாடு கடத்தியது.
இது குறித்து இலங்கை காவல்துறை மூத்த அதிகாரி அஜித் ரோஹானா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் அகதிகள் அடையாள அட்டைகளுடன் தங்கியிருந்த 3 விடுதலைப்புலிகள் மலேசிய காவல்துறையினரால் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேரையும் மலேசிய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் 3 பேரும் திங்கள்கிழமை இரவு கொழும்பு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் இலங்கை தீவிரவாத புலனாய்வு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் 3 பேரையும் மலேசிய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் 3 பேரும் திங்கள்கிழமை இரவு கொழும்பு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் இலங்கை தீவிரவாத புலனாய்வு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விடுதலைப்புலிகள் அமைப்பில் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டார்" என்று தெரிவித்தார்.