Friday, May 30, 2014

14 & 15 வயது பெண்களை கற்பழித்து தூக்கில் தொங்க வைத்த கொடுமை. பொலீஸ் அதிகாரி உட்பட நாள்வா் கைது


15 வயது இளம்பெண்களை கற்பழித்துவிட்டு, அவர்களை ஒரு மாமரத்தில் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்த ஒரு போலீஸ் அதிகாரி உள்பட நான்கு பேர்களை போலீஸார் கிராமத்தினர்களின் தீவிர போராட்டத்திற்கு பின்னர் கைது செய்தனர். இந்த
சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்திற்கு பின்னர் கற்பழிப்பு குற்றத்திற்கு கடும் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவரும் நிலையில் இந்தியாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது.

 உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காட்ரா என்ற கிராமத்தில் இரண்டு இளம்பெண்கள் தங்கள் வீட்டில் டாய்லட் இல்லாததால் வயல்வெளிக்கு சென்றுள்ளனர்.

 அந்த சமயம் அங்கு போதையுடன் வந்த நான்கு நபர்கள் இரண்டு இளம்பெண்களையும் தூக்கி சென்று மறைவிடத்தில் வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இந்த விஷயத்தை அவர்கள் வெளியே சொல்லிவிடுவார்கள் என்று பயந்து இருவரையும் அங்கிருந்த ரு மாமரத்தில் தூக்கி தொங்கவிட்டு கொலை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே கொந்தளித்தது. காவல்துறையினர் உடனடியாக சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த மாமரத்தை சுற்றி உட்கார்ந்து அறபோராட்டத்தில் ஈடுபட்ட்டனர். தொங்கிய உடல்களை கீழே இறக்கக்கூட கிராமத்தினர் விடவில்லை. பின்னர் போலீஸாரின் தீவிர விசாரணையில் 4 பேர்கள் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments