மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து சென்னையில் ஊடகவியளாலர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா 'அனைத்து கட்சி தோழர்களுக்கு நன்றி கூறுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
'தேசிய அளவில் அதிமுக 3ஆவது பெரும்பான்மையுடைய கட்சியாக மாற்றியதற்கு நன்றி. மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கும் கட்சி தோழர்களுக்கும் நன்றி' என அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
'தமிழக மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைகாக நாங்கள் உழைப்போம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். முழுமையான முடிவுகள் வெளிவந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கலாம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராவதற்கும், மத்திய அரசில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கும் வாழ்த்துகளை பதிவு செய்கிறேன்' என அவர் மேலும் கூறியுள்ளார்.