நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள்
நிறைவடைந்துள்ள நிலையில், அறுதிப் பெறும்பான்மையைப் பெற்று பாரதிய ஜனதாக்
கட்சி ஆட்சியமைக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர
மோடி தெரிவாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
543 ஆசனங்களைப் பெறுவதற்காக, மாநில மட்டங்களில் கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்று, இன்றைய தினம் வாக்கெண்ணும் பணிகள் தொடங்கின. ஆரம்பம் முதலே பாஜக கூட்டணியின் கை ஓங்கியிருந்தது. 543 ஆசனங்களில் பாஜக கூட்டணியினர் 333 ஆசனங்களை தமதாக்கிக் கொண்டுள்ளனர். இதில், பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான 272 ஆசனங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி, 278 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். இதனால், கூட்டணி இல்லாமலே, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் தகுதியை பாரதிய ஜனதாக் கட்சி பெற்றிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு வழங்கிய, ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்- தமிழகத்தில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக 36 ஆசனங்களை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஆளும்கட்சியான இந்திய காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் படுதோல்வியடைந்திருக்கிறது. காங்கிரஸை் கூட்டணியினர் மொத்தமாக 61 இடங்களை மாத்திரமே பெற்றிருக்கின்றனர். இதில், சோனியா காந்தியின் இந்திய காங்கிரஸ் 48 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கிறது