பாங்காக் – தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தாய்லாந்தில் கடந்த பல மாதங்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்தது. அங்குள்ள முக்கிய கட்சிகளிடம் ராணுவம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதனை ராணுவத்தளபதி பிரயுத் சான்ஓசா தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.
நாட்டின் சூழ்நிலை மோசமடைவதைத் தடுத்திடவே ராணுவ ஆட்சி நடைமுறைக்கு கொண்டு
வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்கள் அமைதியாக இருக்குமாறும்,
அரசாங்க வேலைகள் தடையின்றி நடைபெறும் என்றும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
