Friday, May 23, 2014

தென் கிழக்கு பல்கலைக்கழக 9ஆவது பட்டமளிப்பு விழா நாளை 2 மணிக்கு

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா நாளை 24 ஆம் திகதி சனிக்கிழமை ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸ்ஹாக் தலைமையில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவிற்கு திறைசேரியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர பிரதம பேச்சாளராகக் கலந்துகொள்ள வுள்ளார். கலை கலாசார பீடத்திலிருந்து 167 பட்டதாரிகளும், இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்திலிருந்து 107 பட்டதாரிகளும், வர்த்தக முகாமைத்துவ பீடத்திலிருந்து 134 வணிகப் பட்டதாரிகளும். பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து 83 பட்டதாரிகளுமாக 441 பேர் பட்டம் பெறவுள்ளனர்.

இவ்விழாவில் நீதியரசர் வீரமந்திரி, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோருக்கு கெளரவப் பட்டங்கள் வழங்கப்படவிருப்பதாகவும் பதிவாளர் எச். அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.

உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முகம்மது இஸ்மாயில் உட்பட பீடாதிபதிகள் மற்றும் பல்கலைக்கழக உயரதிகாரிகளும் விரிவுரையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Disqus Comments