Friday, May 16, 2014

பஸ்ஸினுள் வாக்கு வாதம்: காதலியின் கூந்தலை கத்தரித்த காதலன் கைது!

காதலியின் நீணட கூந்தலை வெட்டிய காதலனொருவரை குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். பஸ் வண்டியில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற காதலன் காதலியின் ஒன்றரை அடி நீளமான கூந்தலை கத்திரிக்கோலால் வெட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


இக்காதல் ஜோடி ஒரே ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி வந்துள்ளதாகவும் சம்பவத்தின் பின்னர் காதலிஇ தனது கூந்தல் வெட்டப்பட்டது தொடர்பாக குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர் 10இ000ரூபா ரொக்கப் பிணையிலும் 5000 ரூபா சரீரப் பிணையிலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Disqus Comments