Saturday, May 17, 2014

மோடிக்கு ஒபாமா வாழ்த்து: அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு


இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனத்தா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறும் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த  செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தீர்மானமான முடிவு கிடைத்துள்ளது என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார். 

மோடி தலைமையில், உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார். உலக பொருளாதாரம் தொடர்பாகவும், இரு நாட்டு உறவு தொடர்பாகவும் மோடியுடன் அவர் பேசினார். 

மேலும் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அரசு அழைப்பும் விடுத்துள்ளது. 

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ட்விட்டரில் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு உறவை மேம்ப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். 

கடந்த 2005 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம், அதில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments