Tuesday, June 24, 2014

119 க்கு தவறான தகவல்களை வழங்கு வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


காவல்துறை அவசர அழைப்புக்கு தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறை அவசர அழைப்புக்கு நாளொன்றுக்கு வரும் 100 அழைப்புகளில் 50க்கும் அதிகமானவை தவறான தகவலை வழங்கும் அழைப்புகளாக இருக்கின்றன.

இந்த நிலையில் இவ்வாறான தவறான அழைப்புகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
Disqus Comments