Wednesday, June 25, 2014

இலங்கையில் தற்போதுள்ள யானைகளின் தொகை 140


தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட யானைகள் 140 மட்டுமே உள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பதியப்படாத யானைகள் தொடர்பில் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் எப்.டீ.ரத்நாயக்க தெரிவித்தார். 

கடந்த 1991ஆம் ஆண்டு பதியப்பட்ட 350 யானைகள் இருந்ததாகவும் அவற்றில் 92 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை வேறு 90 யானைகள் தெஹிவளை மிருகக் காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தில் உள்ளதாகவும் எப்.டீ.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். 
Disqus Comments