கதிர்காமத்தில் வெல்லவாய கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் (27) அடுத்த மாதம் 15ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருகுணு கதிர்காம ஆலயத்தின் எசல பெரஹராவை முன்னிட்டே இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி ருகுணு கதிர்காம ஆலய எசல பெரஹரா ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
