இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இந்திய
கிரிக்கெட் அணித் தலைவர் டோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திரா
நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி விஷ்ணு அவதராத்தில் உள்ள புகைப்படம்
பிஸ்னஸ் டுடே பத்திரிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்தது.
அதன் அட்டைப்படத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் டோனியின் பல
கைகளில் லேஸ் சிப்ஸ், பூஸ்ட் பாக்கெட், கோக், ஷ_ உள்ளிட்ட பல பொருட்கள்
இருந்தன.
இந்த புகைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாகத்
தெரிவித்து ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வை. ஷியாம்
சுந்தர் என்பவர் நீதிமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அனந்தபூர் நீதிமன்றம் டோனியை நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு 3 முறை உத்தரவிட்டது.
ஆனால் டோனி மூன்று முறையுமே ஆஜராகாத நிலையில், இந்த வழக்கு இன்று
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டோனி நீதிமன்றத்தில் ஆஜராகாததால்
அவருக்கு எதிராக பிடிவிறாந்தை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
