Thursday, June 26, 2014

சீனாவில் விசித்திர விலங்கு: வேற்றுக்கிரகவாசியா?

சீனாவின் தலைநகர் பீஜிங் இற்கு அண்மித்த ஹாய்ரோவ் பகுதியில் விசித்திர விலங்கு ஒன்று நடமாடுவதை சுற்றுலாப் பயணியொருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
சிறுநீர் கழிப்பதற்காக மறைவான இடத்துக்குச் சென்றபோது இவ்விலங்கு அங்கிருந்ததாகவும் மிக வேகமாக ஓடி மறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வேற்றுக்கிரகவாசி போல தோற்றமளிக்கும் இந்த விலங்கு குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஜே.ஆர்.ஆர். டொல்கின் என்பவரால் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் போன்றே அந்த உருவம் அமைந்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் படமாக்கப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுக்கொண்ட 'த லோர்ட் ஒப் த ரிங்ஸ்' திரைப்படத்தில் இக்காதாப்பாத்திரம் வெளிக்கொண்டுவரப்பட்டது.
 
அதனையொத்ததான மிருகம் ஒன்றே சீனாவில் இனங்காணப்பட்டுள்ளது



Disqus Comments