மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வாகனேரி குடை முனைக்கல்லில் தாய்ப்பால் புரையேறியதால் ஒன்றரை மாதக்குழந்தை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் மயில் வாகனம் ஜேசுதன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. சம்பவ
தினமான அன்று குழந்தை அழுதவுடன் தான் தாய்ப்பாலை அருந்த கொடுத்ததாகவும்
சிறிது நேரத்தின் பின் அழுகையை நிறுத்திய குழந்தை அழாமல் இருப்பதை கண்டு
பார்த்த போது குழந்தை உயிரிழந்து காணப்பட்டதாகவும் குழந்தையின் தாய்
பொலிஸாருக்கு வாக்கு மூலத்தில் அறிவித்துள்ளார்.
உயிரிழந்த குழந்தை வாழைச்சேனை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக
வைக்கப்பட்டிருப்பதுடன் வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்டு வருகிறார்கள்.