Tuesday, July 8, 2014

2014ல் மதுபானத்தினால் கிடைக்கும் வரி வருமானம் அதிகரிப்பு – நிதி அமைச்சு

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மொத்த உற்பத்தி வரியில் 55.8 வீதமானவை மதுபானம் மற்றும் புகையிலை போன்றவற்றினால் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.
குறித்த காலப்பகுதிக்குள் மதுபானத்தினால் கிடைக்கும் வரி வருமானம் 8  வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்பிரகாரம் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மதுபானத்தினால் அரசாங்கம் 22.5 பில்லியன் ரூபாவை வரி வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதிக்குள் 20.8 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் மதுபானத்தினால் 8 வீத வருமானம் பெறப்பட்டுள்ளதோடு, அல்ககோலின் மூலம் 20.9 வீதம் அதிகரித்துளளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதஙகளில் புகையிலை மூலம் 17.5 பில்லியன் பெறப்பட்டுள்ளதோடு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அது நான்கு வீத வளர்ச்சியையும் காட்டுகின்றது.
புகையிலை மற்றும் மதுபானத்தின் ஊடாக இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் 40 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.
அரச உற்பத்தியில் வரி அறவிடப்படும் மசகு எண்ணெய், வாகன மற்றும் ஏனைய உற்பத்திகளின் மூலம் வருடத்தின் முதல் 4 மாதங்களில்  31.6 பில்லியன் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
Disqus Comments