Saturday, July 26, 2014

தொடரும் விமான விபத்துக்கள். இந்திய ஹெலி விபத்து: 7பேர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின், லக்னோவிலிருந்து 90 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சிதாபூரில் உள்ள அதாரியா எனும் பகுதியில் இந்தியா விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.
 
பரெய்லியிலிருந்து அலஹதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விவசாய நிலப்பகுதி ஒன்றில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 
 
இந்த ஹெலிகொப்டர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதியுயர் தொழில்நுட்ப ஹெலிகொப்டராகும்.
Disqus Comments