Friday, July 25, 2014

தானியங் களுக்கான இறக்குமதி விசேட தீர்வை குறைப்பு

தானியங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வர்த்தக பொருட்களுக்கான விசேட தீர்வை குறைக்கப்பட்டுள்ளது.

தீர்வை தொடர்பான புதிய திருத்தங்கள் நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் மைசூர் பருப்பிற்கான தீர்வை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

பட்டாணி கடலைக்கான தீர்வை 7 ரூபாவினாலும், பாசிப் பயிறுக்கான தீர்வை 32 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தானிய செய்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை தீர்வையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிட்டது.
Disqus Comments