Tuesday, July 29, 2014

காஸாவுக்கு ஆதரவாக கைப்பட்டி அணிந்தமையினால் மொயின் அலிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் மொயின் அலிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவர் கையில் அணிந்திருந்த பட்டி (wristbands) தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

அலி அணிந்திருந்த பட்டியில் “Save Gaza”  மற்றும் “Free Palestine” ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், இது தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

எனினும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை இது தொடர்பில் தெரிவிக்கையில் அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளது.
Disqus Comments