Monday, July 28, 2014

கா.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பம்

2014 க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
 இப்பரீட்சைக்கு 234,197 பாடசாலை மாணவர்களும் 62,116 வெளி மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
 
இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Disqus Comments