லிபியாவில் உள்ள இலங்கையர்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள்
நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
லிபியாவில் உள்நாட்டு
மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பாக
நியூஸ்பெஸ்ட் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர்
மங்கள ரந்தெனியவிடம் வினவியது.
லிபியாவில் தொழில் புரியும்
இலங்கையர்கள் தொடர்பான தரவுகள் கெய்ரோவிலுள்ள இலங்கை தூதரகத்தினால்
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர்
கூறினார்.
இதற்கமைய சுமார் 50 இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு
அழைத்துவரவேண்டிய நிலை காணப்படுவதாகவும், அதற்கான நடவடிக்கைள்
எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமானத்தில் இவர்களை
நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அதிக பணம் செலவிட நேரிட்டுள்ளதாகவும், அதற்கான
நிதியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு
ஒதுக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது
முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
