Thursday, July 31, 2014

கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் ஜெக் கலிஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்ற கலிஸ், தற்போது ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

166 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13289 ஓட்டங்களைப் பெற்றுள்ள ஜெக் கலிஸ், 328 ஒருநாள் போட்டிகளில் 11579 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேவேளை, 25 இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள  ஜெக் கலிஸ் 666 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments