புத்தளம், வட்டவான் பிரதேசத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற
வாகன விபத்தில் புழுதிவயல் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.அர்ஸத் (வயது
19) என்பவர் மரணமடைந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
புத்தளத்திலிருந்து உடப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியும் உடப்பிலிருந்து புத்தளம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொத்தான்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்தார்.
மற்றையவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இது இவ்வாறிருக்க, பஸ் வண்டிச் சாரதியை கைதுசெய்ததுடன், அவரை இன்று புதன்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.