தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை
செய்துவிட்டு சந்தேக நபரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு 11.30
மணியளவில் வவுனியா மாகாரம்பைக் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 38 வயதுடைய ரா. அமுதா என்பவரே தனது கணவனான 45 வயதுடைய செ. ராஜேந்திரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராரே இச்சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கும் பொலிஸார்,
சந்தேக நபர் தனது மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு தனது மாமாவான 65
வயதுடைய வே.ராமச்சந்திரனையும் மற்றும் மாமியான 55 வயதுடைய
ரா.கிருஸ்ணவேணியையும் தாக்கிவிட்டு மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை
செய்துகொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மாமாவும் மாமியும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
