Friday, August 1, 2014

சமீரகம பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது சிறுவன் வபாத்

(தமிழ் மிர்ரா்)முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   மணிகாரன் வீதியின் சமீரகம பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக  முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கொத்தான்தீவு, சமீரகம பிரதேசத்தை சேர்ந்த எச். சிஹான் (15 வயது) எனும் சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கள் ஒன்று சமீரகம பிரதேசத்திலுள்ள மின்சார கம்பத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இருந்து பயணித்த சிறுவனே  படுகாயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது   உயிரிழந்தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Disqus Comments