நாட்டிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுகின்றன.
இதன் பிரகாரம் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் அனைத்தும் இன்று
மூடப்படுவதோடு முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் நான்காம் திகதி
மூடப்படுகின்றன.
இதன் பின்னர் மூன்றாம் தவணைக்காக மீண்டும் அடுத்த செப்டெம்பர் மாதம் 1 ஆம்
திகதி தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதோடு முஸ்லிம்
பாடசாலைகள் செப்டெம்பர் 5 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு
விடுத்துள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
