நைஜீரியாவின் யொப் மாநிலத்திலுள்ள இரு
பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுதாரிகள் செவ்வாய்க்கிழமை
பின்னிரவு நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியானதுடன் பலர்
காயமடைந்துள்ளனர்.
பொரிஸ்கம நகரில் டொகோ டெபோ பிரதேசத்திலுள்ள திறந்தவெளி பள்ளிவாசலொன்றில்
இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளதுடன் 5
பேர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் மேற்படி தாக்குதல் இடம்பெற்று 5 நிமிடங்களின் பின்னர் அந்நகரின்
அங்குவர் பொலவா பிரதேசத்தில் தலைமை இமாமா மின் வளாகத்திலிருந்த பிறிதொரு
பள்ளிவாசலின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அங்கு
தொழுகையில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
திறந்த வெளி பள்ளிவாசலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய போகோ ஹராம்
போராளி குழுவைச் சேர்ந்தவர் என நம்பப்படும் நபரது சடலத்தை தொடுவதற்கு
பிரதேசவாசிகள் மறுத்ததால், அந்த சடலம் அங்கு கைவிடப்பட்ட நிலையில்
நெடுநேரமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
