Saturday, July 5, 2014

ஆபாசக் காட்சிகளைக் காட்டி மாணவிகளை வல்லுறவுக்குட்படுத்திய அதிபர் கைது

கேகாலை  பகுதியில் கணனி மூலம் ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து தமது பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய  பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த அதிபர்சிறுமிகளை தமது காரியாலய அறைக்கு அழைத்து ஆபாசக்காட்சிகளைக் காட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  கேகாலை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பொலிஸ் பிரிவினர் அதிபரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபரிடமிருந்து ஆபாசக்காட்சிகள் அடங்கிய பெண்டரைவ் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கேகாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments