உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் உயர் மட்டக்குழுவினர் சில அரபு நாடுகளின்
முக்கியஸ்தர்களையும் இஸ்லாமிய ஒற்றுமைக்கான அமைப்பின் பிரதிநிதிகளை
யும் சந்தித்து இலங்கை முஸ்லிம் களின் பிரச்சினைகள் குறித்து
விபரித்துவருவதாக நம்பகமாக தெரிய வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,
கட்சியின் பிரதிச்செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான
சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர்,கிழக்கு மாகாண சபை
உறுப்பினரும் சபையின் மு.கா.குழுத்தலைவரும் கட்சியின் சர்வதேச
விவகாரங்களுக்கான பிரதிப்பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமில், சிரேஷ்ட
சட்டத்த்தரணியும் மு.கா. சர்வதேச விவகார பணிப்பாளருமான ஏ.எம்.
பாயிஸ் ஆகியோரே புனித உம்ரா செய்வதற்காக கடந்த சனிக்கிழமை சவூதி
அரேபியா பயணமாகியிருக்கிறார்கள்.
இவர்கள் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சில
அரபு நாடுகளின் முக்கியஸ்தர்களையும் பொது அமைப்புக்களின் பிரதி
நிதிகளையும் சந்திப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக
தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்பிரகாரம் கடந்த மூன்று நாட்களில் சில முக்கியஸ்தர்களுடனான
சந்திப்புக்கள் நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற பெளத்த பேரினவாத
நெருக்கடிகள் குறித்து இதன்போது அவர்களுக்கு விபரிக்கப்பட்டிருப்பதாக
அத்தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.