Tuesday, July 8, 2014

பாலித்தவின் இராஜினாமாவை ஏற்க ரணில் மறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் பாலித்த தேவப்பெருமவின் இராஜினாமா கடிதத்தை, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்துவிட்டார்.

அளுத்கமை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்யாவிட்டால் பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் இல்லாவிட்டால் தான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என அவர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை (08) தனது இராஜினாமா கடித்ததை ஜ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த போது அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

Disqus Comments