காஸாவில் ஐக்கிய நாடுகள் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐக்கிய
நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாடசாலை ஒன்றில்
தங்கியிருந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர்
காயமடைந்துள்ளனர்.
காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடத்தப்பட்டு வரும் குறித்த பாடசாலை
மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்
கண்டனம் தெரிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் தங்கியுள்ள அமெரிக்க
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்
பான் கீ மூன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதே அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பான் கீ மூன் மேலும் தெரிவித்துள்ளதாவது, காஸாவில் ஐ.நா.
பாடசாலை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அறிந்து தான்
அதிர்ச்சிக்குள்ளாகினேன். இது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமாகும். மேலும்,
ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்.