Sunday, July 27, 2014

போர் நிறுத்தத்தை 24 மணித்தியாலங்களுக்கு நீடித்தது இஸ்ரேல்

ஐ.நாவின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணித்தியாலங்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த 19 நாட்களாக நடை பெற்றுவரும் மோதலில் 1000ற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களும், சுமார் 40 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 6,000 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் இஸ்ரேல் பகுதியில் ரொக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேல் கடுமையான பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காஸா பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

முதலில் வான் வழியாக தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல், பின்னர் தரை வழியாகவும் தொடர்ந்தது. சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. இடையில் ஒருநாள் மாத்திரம் 5 மணி நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
Disqus Comments