கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில்
சித்தியடையாது உயர் தர வகுப்புக்களில் கல்விகற்கும் மாணவர்களை இலக்காக
கொண்டு விசேட வகுப்புகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சாதாரண
தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத போதிலும் ஏனைய
தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் உயர் தர வகுப்புக்களில் கல்வி
கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
உயர் தர
வகுப்புககளில் கல்வி கற்கும் அதேவேளை கணிதப் பாடசத்தில் சித்தியடைவதற்காக
இரண்டு தடவைகள் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பமும்
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலளார் அனுர
திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை,
கணிதப் பாடத்தில் சித்தியடையாது உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களின்
கணித அறிவை மேம்படுத்துவற்கான திட்டத்தின்கீழ் 20 மாணவர்களுக்கு ஒரு
வகுப்பு என்ற ரீதியில் வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன