Monday, July 28, 2014

அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்: 6 மாதங்களில் 1202 பேர் பலி

நாடளாவிய ரீதியில் கடந்த ஆறுமாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1202 பேர் மரணமடைந்துள்ளனர் என்று போக்குவரத்து பொலிஸாரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் மேல் மாகாணத்திலேயே கூடுதலானோர் மரணமடைந்துள்ளனர்.

முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளினால் 3534 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 1049 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2485 பேர் சிறுகாயமடைந்துள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து புள்ளிவிபரத்தின் பிரகாரம் நாளொன்றுக்கு ஆறு அல்லது ஏழு வீதி விபத்துகள் இடம்பெறுகின்றது. அதில் 10 பேர் மரணமடைகின்றனர்
Disqus Comments