மாயமான மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம் என்று முன்னாள் ஏர்லைன்ஸ் அதிகாரி மார்க் துகாய்ன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது. அதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்திய பெருங்கடலின் ஆழத்தில் விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தேடுதல் வேட்டையும் தோல்வியிலே முடிந்தது. மாயமான விமானம் தொடர்பான மர்மம் இன்றுவரையில் வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகி வருகிறது.
தற்போது, மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் தான் சுட்டு வீழ்த்தியது என்றும், விமானம் கடத்தப்பட்டு தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்று ப்ரோடியஸ் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை அதிகாரியும், எழுத்தாளருமான மார்க் துகாய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோத செய்து அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

எனவே விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இதுபோன்ற தாக்குதலில்
ஈடுபடுத்தப்படலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க ராணுவம் மலேசியா விமானத்தை
சுட்டு வீழ்த்திவிட்டது. அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ள, இந்திய
பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவு அருகே விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்டது. விமானம் கடத்தப்பட்டது என்ற தகவலை அடுத்து இச்சம்பவம்
நடந்துள்ளது. மாயமான விமானம் மிகவும் தாழ்வான பகுதியில் பறந்ததை தாங்கள்
கண்டதாக மாலத்தீவு வாசிகள் என்னிடம் கூறினர். தீவில் வசிப்பவர்கள் பாராக்
தீவு அருகே தண்ணீரில் காலியாக இருந்த தீ அணைப்பானை கண்டுபிடித்துள்ளனர்.
என்று மார்க் தெரிவித்துள்ளார்.
இப்போது ஒரு வெற்றிகரமான நாவலாசிரியராக உள்ள மார்க், உளவுத் துறை தகவலின்படி மாயமான மலேசிய விமானம் தொடர்பாக விசாரிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டேன் என்று வானொலியில் தெரிவித்தார். கடந்த வாரம் சீனா வெளியுறவுத் துறை அலுவலகம் முன்பாக விமானத்தில் சென்றவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பான புதிய தகவல்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.